ஆப்நகரம்

சத்துணவு திட்டத்தை நம்பியிருக்கும் குழந்தைகளின் நிலை என்ன? - கஸ்தூரி ட்வீட்!

சத்துணவு திட்டம் எந்த அளவுக்கு தமிழகத்தில் இயங்கிவருகிறது என நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கேட்டுள்ளார்.

Samayam Tamil 28 Mar 2020, 3:05 pm
Samayam Tamil kasthuri
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் அனைத்து நிறுவனங்களும், தனிநபர்களும், சமூக இடைவெளியை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது அரசு. இந்நிலையில் பிரபலங்களும் கொரோனா குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர் வீடியோக்களையும் பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில்தான் நடிகை கஸ்தூரி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கஸ்தூரி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு,


தமிழகத்தில் சத்துணவு திட்டம் எந்த நிலையில் உள்ளது. பல லட்சம் குழந்தைகள் இந்த சத்துணவை நம்பித்தான் இருக்கின்றன. சத்துணவு அமைப்பாளர்கள், தொழிலாளர்கள் இப்போதும் வேலை செய்கிறார்களா, அவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கப்பட்டுள்ளதா என கேட்டுள்ளார்.

இந்த ட்வீட்டில் இவர் முதல்வரையும், அமைச்சரையும் டேக் செய்துள்ளார். இது சரியான கேள்வி என பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.


அவர்களும் அரசுப் பணியாளர்கள்தான். அவர்களுக்கும் சம்பளத்துடன் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. உணவு வழங்கப்படவில்லை. நீட்டிக்கப்பட்ட கோடை கால விடுமுறை என கருதிக் கொள்ளுங்கள் என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். இன்னொருவர், தற்போதைய சூழலில் யாரும் கண்டுகொள்ளாத விசயம். சரியான கேள்வி என கூறியுள்ளார்.


கேரளத்திடம் இருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டும். கிராமப்புற பகுதிகள் பலர் தங்கள் வாழ்வாதாரத்துக்கே கஷ்டப்படுகின்றனர். உண்மையிலேயே அருமையான கேள்வி என இவர் கூறியுள்ளார். இன்னும் பலர் இதுகுறித்து கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகையாக இருந்தாலும் கஸ்தூரி சமூக பொறுப்புடன் நடந்துகொள்வதாக கூறியுள்ளனர் சிலர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்