ஆப்நகரம்

‘என்னை கறிவேப்பிலைபோல் தூக்கி எறிந்து விட்டார்கள்’: நடிகை கவிதாவின் ஆதங்கம்!

கட்சிப் பணிக்கு என்னை நன்றாக பயன்படுத்திக் கொண்டு கறிவேப்பிலைபோல் தூக்கி எறிந்து விட்டார்கள் என்று சீனியர் நடிகை கவிதா தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்

TNN 31 May 2017, 1:40 am
கட்சிப் பணிக்கு என்னை நன்றாக பயன்படுத்திக் கொண்டு கறிவேப்பிலைபோல் தூக்கி எறிந்து விட்டார்கள் என்று சீனியர் நடிகை கவிதா தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Samayam Tamil actress kavitha sulks leaves tdp meet
‘என்னை கறிவேப்பிலைபோல் தூக்கி எறிந்து விட்டார்கள்’: நடிகை கவிதாவின் ஆதங்கம்!


பல்வேறு அரசியல் கட்சிகளில் இணைந்து கோலிவுட், டோலிவுட் நட்சத்திரங்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழில்கதாநாயகி முதல் அம்மா வேடங்கள்வரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் நடிகை கவிதா. தற்போது ஆந்திராவில் செட்டிலாகி, தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

நடிகை கவிதா பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘‘கட்சியில் என்னை யாரும் மதிப்பதில்லை, பெண்களுக்கு இந்தகட்சியில் மரியாதை இல்லை. எதற்காக இக்கட்சியில் நான் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்? எதிர்கட்சியாக இருந்தபோது என்னை அரசியல் மேடைகளில் பேச பயன்படுத்திக் கொண்டனர். ஆட்சிக்கு வந்தபின் என்னை ஓரம் கட்டத் தொடங்கினார்கள். 2 ஆண்டுக்கு முன்பும் இதேபோன்ற அவமானத்தை சந்தித்தேன்.

தற்போது நடக்கும் கட்சி மாநாட்டில் என்னை கலந்துகொள்ளச்சொல்லி எம்எல்ஏ ஒருவர் அழைத்தார். ஆனால் மேடையில் அமர்ந்திருப்பவர்கள் என்னைமேடை அருகேகூட விடமாட்டார்கள். சந்திரபாபுநாயுடு முதல்வர் ஆவதற்காக நான் கடுமையாக உழைத்தேன். இன்று என்னை நன்றாக பயன்படுத்திக் கொண்டுகறிவேப்பிலை போல் தூக்கி எறிந்து விட்டனர் ‘‘என்று நடிகை கவிதா கண்ணீருடன் பேட்டியளித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்