ஆப்நகரம்

முதன்முறையாக இணையும் ஜெயம் ரவி - கீர்த்தி சுரேஷ்: எந்த படத்துல தெரியுமா..?

எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ள புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 2 Mar 2022, 8:20 am
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் ஜெயம் ரவி, மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து தனது அடுத்த படங்களுக்கான வேளைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் ஜெயம் ரவி.
Samayam Tamil Jayam Ravi
Jayam Ravi


’பூமி’ படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வந்தார். அண்மையில், இந்தப்படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை நிறைவு செய்தார். இதனை தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ‘பூலோகம்’ படத்தின் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆனார் ஜெயம் ரவி.

ஜெயம் ரவியின் 28வது படமான இதற்கு ‘அகிலன்’ என பெயரிடப்பட்டுள்ளது. ப்ரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்கும் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து சிவா மனசுல சக்தி’, பாஸ் (எ) பாஸ்கரன் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ராஜேஷின் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் ஜெயம் ரவி.

சீக்கிரமே 'அந்த' நல்ல விஷயம் நடக்க போகுது.. குட் நியூஸ் சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!
இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் நாயகியாக நடிப்பதற்கு கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அவர் ஓகே சொன்னால் ஜெயம் ரவி- கீர்த்தி சுரேஷ் இணையும் முதல் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்