ஆப்நகரம்

பழம்பெரும் நடிகை சாவித்திரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!

மறைந்த பழம்பெரும் நடிகையும்,ஜெமினி கணேசனின் மனைவியுமான சாவித்திரியின் வாழ்க்கை குறித்த படமொன்றில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

TNN 3 Jan 2017, 12:41 pm
மறைந்த பழம்பெரும் நடிகையும்,ஜெமினி கணேசனின் மனைவியுமான சாவித்திரியின் வாழ்க்கை குறித்த படமொன்றில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.
Samayam Tamil actress keerthy suresh plays savithri role in a biopic movie
பழம்பெரும் நடிகை சாவித்திரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!


பிரபல நடிகைகளின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பது தற்போது டிரெண்டாகி வருகிறது.கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட ‘டர்ட்டி பிக்சர்’ திரைப்படம் பாலிவுட்டில் சக்கை போடு போட்டது.இதனை தொடர்ந்து மேலும் சில பிரபல நடிகைகளின் வாழ்க்கைகளும் படமாக எடுக்கப்பட்டன.

இந்த வரிசையில் தற்போது மறைந்த பழம்பெரும் நடிகையான சாவித்திரியும் இணைந்துள்ளார்.”மகாநதி” என்ற பெயரில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையானது, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது.இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் மே மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ள இந்த படத்தில்,நடிகை சமந்தாவும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.இது தவிர என்.டி.ஆர்,நாகேஸ்வர ராவ் மற்றும் ஜெமினி கணேசன் ஆகிய கதாபாத்திரங்கள் இடம்பெறும் வகையில் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.அந்த கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை படக்குழு தற்போது தீவிரமாக தேடி வருகிறது.

இந்த படம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட இருப்பதாகவும்,பழைய சினிமா உலகை கண் முன்னே கொண்டு வரும் வகையில் பல கோடி மதிப்பிலான அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Actress Keerthy Suresh plays Savithri role in a biopic movie

அடுத்த செய்தி

டிரெண்டிங்