ஆப்நகரம்

ப்பா... ஸ்டன்னிங் லுக்... பொறாமைப்பட வைக்கும் குஷ்பு!

நடிகை குஷ்புவின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஹார்ட்டின்களை பறக்க விட்டு வருகின்றனர்.

Samayam Tamil 29 Apr 2022, 8:21 pm
நடிகை குஷ்புவின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பொறாமைப்பட வைப்பதாக கூறியுள்ளனர்.
Samayam Tamil actress khushbu latest clicks makes jealous
ப்பா... ஸ்டன்னிங் லுக்... பொறாமைப்பட வைக்கும் குஷ்பு!



ஆல் ரவுண்டர்

பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. நடிகை, அரசியல் பிரமுகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் என ஆல் ரவுண்டராக உள்ளார்.

பல மொழிகள்

தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, சரத்குமார் என முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்துள்ள குஷ்பு தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழியிலும் டாப் நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

சிக் லுக்கில்..

தற்போதும் சினிமா சீரியல் மற்றும் அரசியல் என பிஸியாக உள்ள நடிகை குஷ்பு அவ்வப்போது போட்டோ ஷூட்டுக்களை நடத்தி திணறடித்து வருகிறார். அதிலும் சமீப காலமாய் பெருமளவு எடையை குறைத்து இளம் பெண்களை போல சிக் லுக்கில் கிறங்க வைத்து வருகிறார்.

அம்சமா இருக்கிங்க

அந்த வகையில் தற்போது குஷ்பு ஷேர் செய்துள்ள போட்டோ அவர் வயதுள்ள பலரையும் பொறாமைப்பட வைத்துள்ளது. கை நிறைய வளையல், கழுத்தில் நெக்லஸ், காதில் கம்மல் என அளவான மேக்கப்புடன் அம்சமாக உள்ளார் நடிகை குஷ்பு. இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், ஹார்ட்டின்களை பறக்க விட்டு வருகின்றனர்.

உலக அழகிகள் கூடி

இன்னும் சில நெட்டிசன்கள் வருஷங்கள் ஆக ஆக எல்லோருக்கும் வயது ஏறிக்கொண்டே போகும் உங்களுக்கு மட்டும் குறைவது எப்படி என கேட்டு வருகின்றனர். மேலும் ஜீன்ஸ் படத்தில் இடம் பெற்ற பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி என்ற வரிகளையும் மாற்றி பதிவிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்