ஆப்நகரம்

மீண்டும் சூரிக்கு ஜோடியாகிறார் மதுமிதா!

மீண்டும் சூரிக்கு ஜோடியாகிறார் மதுமிதா!

TOI Contributor 24 Feb 2017, 6:18 pm
நடிகை மதுமிதா, மீண்டும் சூரிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Samayam Tamil actress madhumitha going to pair with soori
மீண்டும் சூரிக்கு ஜோடியாகிறார் மதுமிதா!


‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் மூலம் சந்தானத்துக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை மதுமிதா. அதன்பிறகு ‘மிரட்டல்’, ‘ராஜாராணி’ உள்பட பல படங்களில் அவருடன் நடித்தார் மதுமிதா. ஆனால் சந்தானம் ஹீரோவான பிறகு மதுமிதாவை கண்டுகொள்ளவில்லை. அவர் நாயகனாக நடிக்கும் படங்களில் தனக்கு காமெடி வேடம்கூட தராததை நினைத்து வருத்தப்படுகிறாராம்.

அதேசமயம், ‘நளனும் நந்தினியும்’, ‘ஜில்லா’, ‘வெள்ளைக்காரதுரை’ ஆகிய படங்களில் தன்னை நடிக்க வைத்த சூரியை தற்போது மலைபோல் நம்புகிறார் மதுமிதா. அந்தவகையில், இதுவரை மூன்று படங்களில் சூரியுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போது விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் மீண்டும் சூரிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. அதனால் உற்சாகத்தில் காணப்படுகிறார் மதுமிதா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்