ஆப்நகரம்

அம்மா, தங்கை இருக்கும் போதே மார்பில் கை வைத்த நபர்: இளம் நடிகை பகிர்ந்த பகீர் தகவல்.!

மலையாள திரையுலகின் இளம் நடிகையான மாளவிகா ஸ்ரீநாத் ஆடிஷனின் போது தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 13 Apr 2023, 7:48 am
சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து சில நடிகைகள் அவ்வப்போது பேசி பரபரப்பை கிளப்புவது வழக்கம். அந்த வகையில் மலையாள இளம் நடிகை மாளவிகா ஸ்ரீநாத் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்த அதிர வைக்கும் தகவலை பகிர்ந்து அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.
Samayam Tamil மாளவிகா ஸ்ரீநாத்
மாளவிகா ஸ்ரீநாத்


மலையாள திரையுலகில் இளம் நடிகையாக திகழ்பவர் மாளவிகா ஸ்ரீநாத். இவர் மதுரம், சாட்டர் டே நைட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த மூன்றாண்டுகள் முன்பாக தனக்கு நேர்ந்த கசப்பான சம்பவம் குறித்து பேசியுள்ளார். அதில், நடிகை மஞ்சு வாரியருக்கு மகளாக நடிக்க ஆடிஷனுக்கு சென்றிருந்தேன்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

என்னுடன் அம்மாவும், தங்கையும் வந்திருந்தனர். திரிசூரில் அவர்கள் கூறியிருந்த இடத்திற்கு சென்றோம். அப்போது ஆடிஷனுக்காக என்னை கூந்தலை சரி செய்து வர சொன்னார்கள். இதற்காக மேக்கப் சென்றேன். அப்போது ஆடிஷன் எடுத்துக்கொண்டிருந்த நபர் திடீரென என் பின்னால் வந்து மார்பகத்தில் கை வைத்து அழுத்தி விட்டான்.

Vetrimaaran: வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த நடிகரா..?: அவரே சொன்ன மரண மாஸ் தகவல்.!

கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா உனக்கு பெரிய வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்றான். வெளியே அம்மா, தங்கை இருக்கும் போதே இப்படி ஒரு சம்பவம் நடந்தது. உடனே நான் கத்தி, அங்கிருந்த கேமராவை தள்ளிவிட்டேன். அவனது கவனத்தை திசை திருப்பி ஓடி வந்துவிட்டேன் என கூறியுள்ளார். மாளவிகா ஸ்ரீநாத் பகிர்ந்துள்ள இந்த பகீர் சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும் பல இடங்களில் திரையுலகை சேர்ந்தவர்கள் கண்ணியமாக நடந்து கொண்டாலும் சில இடங்களில் இது போன்று நடக்கிறது. சினிமாவுக்கு வரும் புதிதில் இப்படி நடப்பதை வெளியில் சொன்னால் இன்டஸ்ட்ரியை விட்டே ஒதுக்கிவிடுவார்கள் என்ற பயத்தில் பலரும் இதுக்குறித்து வெளியில் சொல்வதில்லை என கூறியுள்ளார். மாளவிகா ஸ்ரீநாத்தின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Lingusamy: இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை: நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்