ஆப்நகரம்

காதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிரபல நடிகை

பிரபல சின்னத்திரை நடிகை மேக்னா வின்சென்ட் தனது காதலர் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.

Samayam Tamil 3 May 2020, 8:36 am
தமிழ், மலையாள தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் நடித்து வருபவர் மேக்னா வின்சென்ட். தமிழில் தெய்வம் தந்த வீடு, பொன்மகள் வந்தாள், அவளும் நானும் ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். மேலும் சந்திரன், ஆனந்தி நடித்த கயல் படித்திலும் நடித்திருக்கிறார் மேக்னா.
Samayam Tamil meghna vincent


மேக்னா டான் டோனி என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதி கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள புனித பிரான்சிஸ் தேவாலயத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது.

திருமணமான ஓராண்டில் மேக்னா, டான் டோனி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித் தனியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இருவரும் முறைப்படி நீதிமன்றம் சென்று விவாகரத்து பெற்றுள்ளனர்.

டான் டோனி இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. மேக்னா, டான் டோனி விவாகரத்து செய்தி வெளியானதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டான் டோனியின் சகோதரி டிம்பிள் ரோஸும் நடிகையாவார். அவருக்கும், கொச்சியை சேர்ந்த தொழில் அதிபர் ஆன்சன் பிரான்சிஸுக்கும் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி திருமணமானது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்