ஆப்நகரம்

என் திருமணத்தை கடவுளிடம் ஒப்படைத்து விட்டேன்: நக்மா!

என் திருமணத்தை கடவுளிடம் ஒப்படைத்துவிட்டேன். அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று பிரபல நடிகை நக்மா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Samayam Tamil 5 Mar 2019, 1:26 pm
நடிகை நக்மா 1990களில் தென்னிந்திய மொழிகள் அனைத்தும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவருக்கு எல்லா மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். தற்போது இவருக்கு 44 வயதாகிறது. இன்னும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கையை கடத்தி வருகிறார். இவர் நடிகை ஜோதிகாவின் அக்காவும்கூட.
Samayam Tamil nagma


சில காலம் இவர் சினிமாவை விட்டு ஒதுங்கி தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரியாகியுள்ளார் . ஒரு முன்னணி தெலுங்கு ஹீரோ படத்தில் அம்மாவாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகை நக்மா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது திருமணம் பற்றி கூறியுள்ளார். “என்னுடைய திருமணம் வாழ்க்கை என் கையில் இல்லை. அதை கடவுளிடம் ஒப்படைத்துவிட்டேன். அவர்தான் அதை முடிவு செய்ய வேண்டும். அதற்கான நேரம் வரும்போது அது தானாக நடக்கும்‘‘ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்