ஆப்நகரம்

ஆண் குழந்தைக்கு தாயான ‘அட்டகத்தி’ நந்திதா!

‘அட்டகத்தி’ பட நாயகி நந்திதா, ‘நர்மதா’ என்ற படத்தில் ஒரு ஆண் குழந்தைக்கு தாயாக நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 8 May 2018, 6:55 pm
‘அட்டகத்தி’ பட நாயகி நந்திதா, ‘நர்மதா’ என்ற படத்தில் ஒரு ஆண் குழந்தைக்கு தாயாக நடிக்கவுள்ளார்.
Samayam Tamil nandita-23-2


நடிகை நந்திதா தமிழில் ‘அட்டகத்தி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சில நாட்கள் கழித்து தன் பெயரை நந்திதா ஸ்வேதா என மாற்றிக் கொண்டார். அதன் பின் பல படங்களில் நடித்தார். இருந்தாலும் அவருக்கு பெயர் சொல்லும் விதமாக அமைந்த படங்கள் , ‘அட்டகத்தி’ மற்றும் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’.

கோலிவுட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விரும்பி நந்திதா, தன்னுடைய பாதையை மாற்றிக் கொண்டார். எல்லாரையும் போல் எல்லா படங்களிலும் நடிக்காமல் காதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க விரும்பினார். அந்த வகையில் அவருக்கு கிடைத்த படம் ‘நர்மதா’. இந்த படத்தில் அவர் 7 வயது ஆண் குழந்தைக்கு தாயாக நடிக்கவுள்ளார். அவர் கணவராக நடிகர் விஜய் வசந்த் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்