ஆப்நகரம்

Bigil: எதற்காக பிசியோதெரபி மாணவியாக நயன்தாரா நடித்துள்ளார்?

விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் படத்தில் நயன்தாரா பிசியோதெரபி மாணவியாக நடித்துள்ளார்.

Samayam Tamil 16 Jul 2019, 11:41 am
தெறி மற்றும் மெர்சல் ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து அட்லி – விஜய் கூட்டணியில் 3ஆவதாக உருவாகி வரும் படம் பிகில். கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில் விஜய் மைக்கேல் மற்றும் பிகில் என்று அப்பா மற்றும் மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் உடன் இணைந்து நயன்தாரா, ஜாக்கி ஷரூப், கதிர், விவேக், ஆனந்தராஜ், இந்துஜா, வர்ஷா, யோகி பாபு, சௌந்தரராஜா, பூவையார், டேனியல் பாலாஜி, ஐ எம் விஜயன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
Samayam Tamil nayan


இந்த 2 காரணங்களுக்காக அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ல் வெளியீடு!


அமீர்கான், ஏ ஆர் ரஹ்மான், கமல், "தலைவன் இருக்கிறான்" மாஸ் அப்டேட் !!

கடந்த மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அடுத்தடுத்து, 2ஆவது மற்றும் 3ஆவது லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வர உள்ளது என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒன்று.

இந்த நிலையில், இப்படத்தில் பிரபல காமெடி நடிகர் மனோபாலா அண்மையில் இணைந்துள்ளார். அதற்கு முன்னதாக பிரபல கால்பந்து வீரரான ஐ எம் விஜயன் இணைந்துள்ளார். இது குறித்து அறிவிப்பு வெளியான போது இவர் தான் விஜய்யின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று தகவல் வெளியானது. இதற்கிடையில், முதல் முதலாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், தளபதி விஜய் இப்படத்தில் வெறித்தனம் என்ற பாடலை பாடுகிறார் என்று அறிவிப்பு வெளியானது.

நடிகர் தனுஷ் போலி சான்றுகளை தாக்கல் செய்த வழக்கு ஆகஸ்ட் 30க்கு ஒத்திவைப்பு!


இந்த நிலையில், தான் தற்போது நயன் தாரா குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில், இப்படத்தில் நயன்தாரா பிசியோதெரபி மாணவியாக நடித்துள்ளாராம். இதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் பிரத்யேகமாக செட் அமைக்கப்பட்டு நயன்தாராவின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளிக்கு வரும் இப்படம் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்கும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







அடுத்த செய்தி

டிரெண்டிங்