ஆப்நகரம்

Darbar: சந்திரமுகியைப் போன்று தர்பார் ஹிட்டுக்காக காத்திருக்கும் நயன்தாரா!

பிகில் படத்தால் நயன்தாராவிற்கு வரவேற்பு கிடைக்காத நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

Samayam Tamil 4 Nov 2019, 12:26 pm
அண்மையில், நயன்தாரா நடிப்பில் வெளிவந்த படம் பிகில். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனா, படத்தில் இந்த ஜோடியின் காட்சிகளுக்கு ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால், நயன்தாராவிற்கு ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்தது. இதற்கு முன்னதாக வந்த வில்லு படமும் இந்த ஜோடிக்கு போதுமான வரவேற்பு கொடுக்கவில்லை.
Samayam Tamil Nayanthara


பிகில் பட நடிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா

இதனால், இனி வரும் படங்களில் விஜய்யுடன் இணைந்து படங்களில் நடிப்பாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. இந்த நிலையில், இனி வரும் ஒரு பெரிய படம் தர்பார் மட்டுமே. ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. போலீஸ் கதையை மையப்படுத்திய இப்படத்தில், ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

விடிவு காலம் பொறந்தாச்சு: தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சந்திரமுகி, குசேலன் ஆகிய படங்களைத் தொடர்ந்து, இந்தப் படத்தில், ரஜினியுடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ளார். சந்திரமுகி படத்தில், ரஜினிக்கு ஜோடியாக துர்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். இதே போன்று தர்பார் படமும் நயன்தாராவிற்கு பாராட்டு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவன் இருக்கிறான் படத்தில் கமலுக்கு ஜோடியான ரேவதி?

இந்தப் படத்தில், இவர்களுடன் இணைந்து நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், தம்பி ராமையா, சுனில் ஷெட்டி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். வரும் 2020 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தர்பார் படத்தைத் தொடர்ந்து நயன்தாராவின் 65 ஆவது படமாக நெற்றிக்கண் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை மிலிண்ட் ராவ் இயக்கி வருகிறார். இதற்கு முன்னதாக அப்பா மகன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் தான் நெற்றிக்கண். இப்படத்தை தயாரித்த கவிதாலயா புரோடக்‌ஷன் நிறுவனத்தின் உரிமையாளர் கே பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமியை சந்தித்து நெற்றிக்கண் டைட்டிலுக்கான என்ஓசி,யை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் இந்த ஆண்டு இறுதிக்குள் நயன்தாராவிற்கு திருமணம் நடக்கும் என்று சேலம் இளம் ஜோதிடர் பாலாஹாசன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்