ஆப்நகரம்

முதன் முறையாக கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஓவியா!

நடிகை ஓவியா முதன் முறையாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 20 Nov 2018, 10:26 am
நடிகை ஒவியா ‘களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து பல படங்களில் நடித்தார். இருந்தாலும் அவரால் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை.
Samayam Tamil நடிகை ஓவியா
நடிகை ஓவியா


இதற்கிடையில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் இடையிலேயே ஓவியா வெளியேறினார். இருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு மக்களிடையே நல்ல செல்வாக்கு இருந்தது. அதன் பயனாக தற்போது தொடர்ச்சியாக விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். மேலும் கலைநிகழ்ச்சிகளுக்காக வெளிநாடு சென்று வருகிறார்.

தற்போது வரை ஓவியாவுக்கு கால்ஷீட் இல்லையாம். தற்போது நடிகை ஓவியா, சிம்புவுடனும் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஓவியா தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார்.

பிக்பாஸ் முதல் சீசனில் அதிகளவில் பேசப்பட்ட ஓவியா தற்போது கடற்கரையில் ஒன்றில் ஆரவ்வுடன் சுற்றி வரும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் காதலிப்பதாக பிக்பாஸ் சீசன் ஒன்றின்போது கூறப்பட்ட நிலையில், இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்