ஆப்நகரம்

சிலுக்குவார்பட்டி சிங்கத்தில் சிலிர்க்க வருகிறார் ஓவியா!

நடிகை ஓவியா ’சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்துள்ளார்.

TNN 10 Aug 2017, 2:44 pm
நடிகை ஓவியா ’சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்துள்ளார்.
Samayam Tamil actress oviya pair with vishnu vishal
சிலுக்குவார்பட்டி சிங்கத்தில் சிலிர்க்க வருகிறார் ஓவியா!


‘கதாநாயகன்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால், புதுமுக இயக்குநர் செல்லப்பா இயக்கத்தில் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் மிக முக்கிய வேடத்தில் ஓவியா நடித்துள்ளார். இந்தப் படத்தை விஷ்ணு விஷால் தயாரித்து வருகிறார்.

நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பே படப்பிடிப்பு தொடங்கி படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டனர். தற்போது ஓவியா ஒரு பாடல் மற்றும் சில காட்சிகளில் மட்டும் நடிக்க வேண்டி உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்போது ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டதால்அவர் நடிக்கவேண்டிய காட்சிகளை விரைவில் வந்து நடித்துக் கொடுப்பார் என்றே தெரிகிறது.

சமீபத்தில் விஷ்ணு விஷாலின் பிறந்த நாளன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியானது. இதில் ரெஜினா, கருணாகரன், யோகி பாபு, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், சிங்கமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்னர். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதிகளைச் சுற்றி நடைபெற்றுள்ளது. விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறது படக்குழு. ‘கதாநாயகன்’ படத்தின் வெளியீட்டுப் பணிகளை முடித்துவிட்டு, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்‘ படத்தை தொடரவுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்