ஆப்நகரம்

Parvathy Omanakuttan: தனது காதலருடன் விருந்து சாப்பிட்ட ‘பில்லா 2’ பட நடிகை பார்வதி குட்டன்!

‘பில்லா 2’ படத்தில் நடித்த பார்வதி குட்டன், தன் காதலருடன் விருந்து சாப்பிடும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Samayam Tamil 11 Aug 2018, 2:03 pm
கொச்சின்: ‘பில்லா 2’ படத்தில் நடித்த பார்வதி குட்டன், தன் காதலருடன் விருந்து சாப்பிடும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
Samayam Tamil Parvathi Dinner


நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான படம் ‘பில்லா2’. இந்தப் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி குட்டன். இவர் மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர். மேலும் உலக அழகி போட்டியில் இறுதிவரை சென்றுள்ளார்.

தற்போது பார்வதி குட்டன் தன் காதலரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவரின் பெயர் ரோனக் ஷா. அவருடன் ஒரு ஸ்டார் ஓட்டலில் விருந்து சாப்பிட்டபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பார்வதி குட்டன்.

அவர் பற்றிய மேலும் விவரங்கள் எதுவும் சரியாக தெரியாத நிலையில், இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பரவி வருகிறது. தற்போது எந்தப் படத்திலும் நடிக்கவில்லை பார்வதி குட்டன்.

Actress Parvathy Omanakuttan ate dinner with her boy friend.

அடுத்த செய்தி

டிரெண்டிங்