ஆப்நகரம்

இது ரொம்ப மோசம்.. விமானத்தில் நடந்த கசப்பான சம்பவம்: ‘பீஸ்ட்’ பட நாயகி பகீர் புகார்.!

விஜய்யின் ‘பீஸ்ட்’ பட நடிகை பூஜா ஹெக்டே, தனியார் விமான பணியாளர் ஒருவர் தங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் அளித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Samayam Tamil 9 Jun 2022, 7:24 pm

'மாஸ்டர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து 'பீஸ்ட்' படத்தில் நடித்தார் விஜய். கோலிவுட் வட்டாராமே எதிர்பார்த்து கொண்டிருந்தஇந்தப்படம் அண்மையில் வெளியானது. இந்நிலையில் கதாநாயகி பூஜா ஹெக்டே தனியார் விமான பணியாளர் ஒருவர் தங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்த 'பீஸ்ட்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்தார். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் 'பீஸ்ட்' படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார்.இந்தப்படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான 'பீஸ்ட்' படம் குறித்து பலவிதமான நெகட்டிவ் விமர்சனங்கள் இணையத்தில் குவிந்தது. அதனையும் தாண்டி படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்தது. மேலும் முகமூடி படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வரவேற்பை பெறாத பூஜா ஹெக்டேவுக்கு ‘பீஸ்ட்’ படம் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்து கொடுத்தது.
Samayam Tamil Pooja Hegde
Pooja Hegde


இந்நிலையில் ட்விட்டரில் அதிரடி புகார் ஒன்றை எழுப்பியுள்ளார் பூஜா. இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மும்பையில் இருந்து இன்று கிளம்பும்போது, இண்டியா கோ விமானத்தின் ஊழியர் விபுல் நகாசே என்பவர், எங்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டார்.

'தலைவர் 169' படத்திற்காக தீயாய் வேலை செய்யும் நெல்சன்: தரமான சம்பவம் கன்பார்ம்.!
அவர் நடந்து கொண்ட விதம் அகங்காரமானது. எந்த வித காரணமும் இல்லாமல் எங்களை அச்சுறுத்தும் விதத்தில் பேசினார். நான் இதுபோன்ற விஷயங்களுக்கு எல்லாம் ட்வீட் போடுவதில்லை. ஆனால் இன்றைக்கு எங்களுக்கு நடந்தது மிக மோசமான சம்பவமாகும்’ என பதிவிட்டுள்ளார்.அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்