ஆப்நகரம்

வில்லியாக நடிக்கும் பூர்ணா!?

சசிகுமார் நடிக்கும் ‘கொடிவீரன்’ படத்தில் நடிகை பூர்ணா வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

TNN 1 Jun 2017, 1:07 pm
சசிகுமார் நடிக்கும் ‘கொடிவீரன்’ படத்தில் நடிகை பூர்ணா வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
Samayam Tamil actress poorna act as villain
வில்லியாக நடிக்கும் பூர்ணா!?


இயக்குனர் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்து வரும் படம் ‘கொடி வீரன்’. இவர் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமாருக்கு இது இரண்டாவது படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம், சிவகங்கைப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிகைகள் மகிமா நம்பியார், சனுஷா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இந்நிலையில், நடிகை பூர்ணாவும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.

ஆண்கள் மட்டுமே வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் கேரக்டரில், தற்போது பெண்களும் சேர்ந்துவிட்டார்கள். ‘சண்டகோழி 2’ படத்தில், விஷாலுக்கு வில்லியாக நடிக்கிறார் வரலட்சுமி. அதேபோல, இந்தப் படத்தில் சசிகுமாருக்கு வில்லியாக நடிகை பூர்ணா நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே ‘தகராறு’ படத்தில் ஹீரோயினாக நடித்தாலும், வில்லத்தன கேரக்டரில் நடித்திருந்தார் பூர்ணா என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்