ஆப்நகரம்

தலையை மொட்டையடித்துக் கொள்ளும் நடிகை பூர்ணா!

‘கொடிவீரன்’ படத்திற்காக தலையில் மொட்டை அடித்து கொள்கிறார் நடிகை பூர்ணா.

TNN 3 Jul 2017, 3:23 pm
‘கொடிவீரன்’ படத்திற்காக தலையில் மொட்டை அடித்து கொள்கிறார் நடிகை பூர்ணா.
Samayam Tamil actress poorna playing a different role in kodiveeran
தலையை மொட்டையடித்துக் கொள்ளும் நடிகை பூர்ணா!


நடிகர் சசிகுமாரை வைத்து ‘கொடி வீரன்’ என்ற படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி வருகிறார். வழக்கம்போல் கிராமத்து கதையில் தயாராகி வரும் இந்த படத்தில் நாயகியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். ‘ரேணிகுண்டா’ சனுஜா தங்கை வேடத்தில் நடிக்கிறார். காதல், செண்டி மென்ட், ஆக்சன் கலந்த கதையில் இந்த படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் பூர்ணா நடிக்கிறார். சமீபகாலமாக கதாநாயகி என்கிற அந்தஸ்தில் இருந்து விலகி முக்கியத்துவம் வாய்ந்த மாறுபட்ட கதாபாத்திரங்கள் பக்கம் திரும்பியுள்ள பூர்ணா, ‘சவரக்கத்தி’ படத்தில் டைரக்டர் ராமின் மனைவியாக இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்திருப்பவர், இந்த கொடிவீரன் படத்தில் ஒரு அழுத்தமான ரோலில் நடிக்கிறார்.

முக்கியமாக, இந்த படத்துக்காக ஒரு காட்சியில் நிஜமாகவே அவருக்கு மொட்டை அடிக்கப்படுகிறதாம். அந்த அளவுக்கு எந்த கதாநாயகிகளும் செய்யத்துணியாத வகையில், இந்த படத்திற்காக தனது தலைமுடியை தியாகம் செய்கிறார் பூர்ணா.

இதுகுறித்து இயக்குனர் அவரிடம் இந்த சீனைப் பற்றி சொன்னபோது எந்த அதிர்ச்சியையும் காட்டாமல், கதைக்கு அவசியம் என்றால் அப்படி நடிப்பதில் தவறில்லை என்றாராம். கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொன்னாராம் பூர்ணா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்