ஆப்நகரம்

குளியல் காட்சியில் கண்டிஷன் போட்டு நடித்த நடிகை!

நடிகை ஆனந்தி, குளியல் காட்சியில் நடிக்க சில கண்டிஷன் போட்டு நடித்துள்ளாராம்.

TOI Contributor 23 Aug 2016, 10:26 am
நடிகை ஆனந்தி, குளியல் காட்சியில் நடிக்க சில கண்டிஷன் போட்டு நடித்துள்ளாராம்.
Samayam Tamil actress put up conditions for bath taking scene
குளியல் காட்சியில் கண்டிஷன் போட்டு நடித்த நடிகை!


நடிகை ஆனந்தி ‘மன்னர் வகையறா’ என்ற படத்தில் பட்டுக்கோட்டை பெண்ணாக நடித்து வருகிறார். சட்டக்கல்லூரி மாணவராக விமல் நடித்து வரும் இந்த படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடிக்க பல புதுமுக நடிகைகளை ஆடிசன் வைத்து பார்த்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த முகம் கிடைக்கவில்லையாம். அதனால்தான் எதற்கு புதுமுக நடிகையை நடிக்க வைத்து ரிஸ்க் எடுக்க வேண்டும். ஏற்கனவே பல படங்களில் கிராமத்து வேடங்களில் நடித்துள்ள ஆனந்தியையே நடிக்க வைத்து விடலாம் என்று அவரை புக் பண்ணினார்களாம். மேலும், இந்த படத்திற்காக சற்று வெயிட் போட்டுள்ளார் ஆனந்தி.

இதுவரை தனது ஒல்லிக்குச்சி உடல்கட்டை காரணம் காட்டி கவர்ச்சிக்கு கட்டுப்பாடு விதித்து வந்தவர், இந்த படத்தில் கிராமத்து பம்பு செட்டில் குளிப்பது போன்று ஒரு காட்சியில் ஓரளவு கிளாமராக நடித்திருக்கிறாராம். அதேசமயம் இந்த காட்சியில் தான் நடிக்கிறபோது நிறைய பேர் என்னை வேடிக்கை பார்க்கக்கூடாது என்று சில கண்டிசன்களைப் போட்டு நடித்தாராம் ஆனந்தி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்