ஆப்நகரம்

முதன் முறையாக தன் காதலரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய நடிகை ராய் லட்சுமி!

பிரபல நடிகை ராய் லட்சுமி, முதன் முறையாக தான் திருமணம் செய்துகொள்ள இருக்கும் தனது காதலரின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 16 Feb 2019, 2:07 pm
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை ராய் லட்சுமி. இவர் பல படங்களிலும் நடித்திருந்தாலும் இன்னும் முன்னணி நடிகையாக வர முடியவில்லை.
Samayam Tamil lakshmi1


இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மறறும் இந்தியிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் தமிழில் ‘நீயா 2’ படத்தில் ஜெய் உடன் இணைந்து நடித்து வருகிறார். கடந்த மாதம் இந்தப் படத்தின் டிரைலர் வெளியானது. இந்த டிரைலருக்கு ரசிகர்களிடம் இருந்து போதிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் சினிமா பிரபலங்களில் பலரும் இதுவரை வெளியே சொல்லாத தனது காதல் கதையை ஒவ்வொருவராக இந்த காதல் தினத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

நடிகர்கள் ஆர்யா, விஷால் என அந்த வரிசையில் தற்போது நடிகை ராய் லட்சுமியும் இணைந்துள்ளார். நடிகை ராய் லட்சுமி இதுவரை வெளிக் காட்டாத தனது வெளிநாட்டு காதலரின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் தனது அளவுக்கு அதிகமான காதலையும் கூறியுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்