ஆப்நகரம்

விஜய், அட்லி காம்பினேஷனில் நடிக்க விரும்பும் பிரபல நடிகை!

பிரபல நடிகை ராஷி கண்ணா, விஜய் - அட்லி காம்பினேஷனில் ஒரு படத்தில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

Samayam Tamil 5 Jan 2019, 3:52 pm
தமிழ் சினிமாவில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் தெலுங்கு நடிகை ராஷி கன்னா. இவர் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தமிழ் படம் ‘அடங்க மறு’. இந்தப் படம் ஓரளவு சுமாரான வெற்றியைப் பெற்றது.
Samayam Tamil rashikanna


இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா அளித்த பேட்டி ஒன்றில், ‘‘நான் தினந்தோறும் காலையில் ஒன்றரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன். எனக்கு அதிகமான கார உணவு பிடிக்காது. நிறைய சாப்பிட மாட்டேன். கறுப்பும் வெள்ளையும் எனக்கு பிடித்த நிறங்கள். யாருக்கும் தெரியாமல் கவிதை எழுதுவேன். அடிக்கடி இசை கேட்பேன். பைக், கார் எதுவானாலும் நீண்ட பயணம் செல்வது பிடிக்கும்.

‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நான் நடித்திருந்தாலும், நயன்தாரா, விஜய்சேதுபதி ஆகியோர் கூட நடிக்க முடியவில்லை. ‘விக்ரம் வேதா’ படம் பார்த்ததில் இருந்து விஜய் சேதுபதியுடன் நடிக்க விரும்புகிறேன். அதேபோல் விஜய் நடித்த ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய ரெண்டு படங்களும் பார்த்தேன். விஜய் & -அட்லி காம்பினே‌ஷனில் நடிக்க வேண்டும் என்பதும் என் ஆசை’’ என்றார் ராஷி கண்ணா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்