ஆப்நகரம்

Rashmika Mandanna: பைக்கில் பாலோ பண்ணிய இளைஞர்கள்: நேஷனல் கிரஸ் செய்த காரியம்.!

'வாரிசு' ஆடியோ லான்ச்சில் இருந்து காரில் கிளம்பிய ராஷ்மிகா மந்தனாவை பைக்கில் பின் தொடர்ந்துள்ளனர் ரசிகர்கள்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 28 Dec 2022, 11:13 am
கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. 'கீதா கோவிந்தம்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராஷ்மிகா, ‘சுல்தான்’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இவருக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவிலான இளம் ரசிகர்கள் உள்ளனர்.
Samayam Tamil Rashmika
Rashmika


இவர் தற்போது விஜய் ஜோடியாக ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகும் இந்தப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்கியுள்ளார். பொங்கலுக்கு வெளியாகவுள்ள இந்தப்படத்தின் புரமோஷன் பணிகள் படு ஜோராக நடந்து வருகிறது. மேலும் ராஷ்மிகா முதன்முறையாக விஜய் ஜோடியாக நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

'வாரிசு' படத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனாவுடன் முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு, குஷ்பு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் டிரெண்டிங்கில் இணையத்தை கலக்கி வருகிறது.

Siddharth: இந்தியில் பேசி என் பெற்றோர்களை துன்புறுத்தினார்கள்: சித்தார்த் பரபரப்பு குற்றச்சாட்டு.!

'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு கடந்த 24 ஆம் தேதி இப்படத்தின் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் விஜய், தில் ராசு, வம்சி, எஸ்.ஜே. சூர்யா, சரத்குமார், ஷாம், குஷ்பு, ராஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். விஜய் ரசிகர் மன்ற மாநாடு என்று சொல்லும் அளவிற்கு ஆரவாரமாக நடந்து முடிந்துள்ளது இவ்விழா.

Samantha: போராடிக்கொண்டே இருங்கள்: உடல்நிலை பற்றி நடிகை சமந்தா உருக்கம்.!

இந்நிலையில் 'வாரிசு' இசை வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு தன் காரில் புறப்பட்ட ராஷ்மிகாவை சில ரசிகர்கள் இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்துள்ளனர். ரசிகர்களைப் பார்த்த ராஷ்மிகா காரை நிறுத்தச் சொல்லி, "ஹெல்மெட் போட்டுக்கோங்க..." என ரசிகர்களிடம் அறிவுரைச் சொல்லிவிட்டுக் கிளம்பியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்