ஆப்நகரம்

திலீப்பின் ஆதரவாளர்களுக்கு சவுக்கடி கொடுத்த நடிகை!

திலீப்பை ஆதரித்து அவரை சிறையில் சந்தித்துப் பேசிய நடிகர்களுக்கு நடிகை ரிமா தனது பாடல் மூலம் சவுக்கடி கொடுத்துள்ளார்.

TOI Contributor 15 Sep 2017, 12:40 pm
திலீப்பை ஆதரித்து அவரை சிறையில் சந்தித்துப் பேசிய நடிகர்களுக்கு நடிகை ரிமா தனது பாடல் மூலம் சவுக்கடி கொடுத்துள்ளார்.
Samayam Tamil actress reema kallingal criticizes actor dileep
திலீப்பின் ஆதரவாளர்களுக்கு சவுக்கடி கொடுத்த நடிகை!


பிரபல மலையாள திரைப்படநடிகர் திலீப் பிரபல நடிகை கடத்தல் வழக்கில் கைதாகி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு மாதமாக சிறையில் இருக்கும் இவரை தனது இரண்டாவது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன் சந்தித்துப் பேசினார். மேலும் அவரை நடிகர்கள் ஜெயராம், கணேஷ்குமார், சீனிவாசன், விஜயராகவன் உள்ளிட்ட வேறு சில நடிகர்களும் சந்தித்து ஆதரவும் ஆறுதலும் தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகை மீதான பாலியல் தொல்லை சம்பவத்தையடுத்து நடிகைகள் ரிமா கல்லிங்கல், மஞ்சுவாரியர், பூ பார்வதி, ரம்யா நம்பீஸன் உள்ளிட்ட பலநடிகைகள் இணைந்து பெண்கள் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கி செயல்பட்டு வருகின்றனர். இந்த அமைப்பினர் திலீப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில் கேரள அரசின் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் சில தினங்களுக்கு முன்பு நடந்தது. மேடையில் நடிகை ரிமா நடனம்ஆடினார். திடீரென்று அவர், நடிகை மீதான பாலியல் தாக்குதல் குறித்து தனது பாடலில் இணைத்து பாடினார். திலீப்பை சிறையில் சந்தித்த நடிகர்களுக்கு சவுக்கடிகொடுக்கும் வகையில் அவரது பாடல் வரிகள் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Actress reema kallingal criticizes actor dileep

அடுத்த செய்தி

டிரெண்டிங்