ஆப்நகரம்

கணவர், மகனுடன் காட்சியளிக்கும் நடிகை ரீமா சென்!

நடிகை ரீமா சென், தன் கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Samayam Tamil 26 Jul 2018, 5:05 pm
நடிகை ரீமா சென், தன் கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
Samayam Tamil கணவர், மகனுடன் காட்சியளிக்கும் நடிகை ரீமா சென்!



கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘மின்னலே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரீமா சென். இந்தப் படத்தை அடுத்து தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும், இவரது நடிப்பை வெளிக்காட்டிய படங்கள் ‘வல்லவன்’ மற்றும் ‘ஆயிரத்தில் ஒருவன்’.


நடிகை ரீமா சென், 2012ம் ஆண்டு ஷிவ் கரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு தனது கணவர் வீட்டோடு ஒன்றி விட்டார். அதன் பின் சினிமா பக்கமே வரவில்லை. இவர்களுக்கு ருத்ரவீர் சிங் என்ற மகன் இருக்கிறார்.


அண்மை காலமாக ரீமா சென் குடும்ப புகைப்படங்களும், நண்பர்களுடன் அவர் எடுத்த புகைப்படங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளது. அவரின் ஒரு போட்டோவை பார்த்த ரசிகர்கள் அழகிய ரீமா சென்னா இது இப்படி குண்டாக அடையாளம் தெரியாமல் இருக்கிறார் என்று அதிர்ச்சியாகியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்