ஆப்நகரம்

விஜய் சேதுபதி படத்தை பார்க்க விரும்பும் பிரபல நடிகை!

விஜய் சேதுபதி நடித்த எல்லா படங்களையும் நான் பார்க்க விரும்புகிறேன் என்கிறார் நடிகை ரித்திகா சிங்.

TOI Contributor 4 Mar 2016, 1:44 pm
விஜய் சேதுபதி நடித்த எல்லா படங்களையும் நான் பார்க்க விரும்புகிறேன் என்கிறார் நடிகை ரித்திகா சிங்.
Samayam Tamil actress rithika singh wants to see vijay sethupathi film
விஜய் சேதுபதி படத்தை பார்க்க விரும்பும் பிரபல நடிகை!


தமிழில் ‘இறுதிச் சுற்று’ படம் மூலம் அறிமுகமானவர் ரித்திகாசிங். இவர் டைரக்டர் மணிகண்டன் இயக்கும் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இந்தப் படத்தில் நடிக்கவிருப்பது குறித்த ரித்திகாசிங்கிடம் கேட்டபோது, ‘‘நானும் எனது தந்தையும் மும்பையில் இருந்து அதிகாலை 4.30க்கு கிளம்பி சென்னை வந்து டைரக்டர் மணிகண்டனை நேரில் சந்தித்து கதை கேட்டோம். அவர் கதை கூறிய விதமும், எனது கேரக்டரும் மிக அருமையாக இருந்தது. உடனே படத்தில் நடிக்க சம்மதித்தேன். பின்பு அன்று இரவே மும்பைக்கு திரும்பினேன். இந்த நாள் எனக்கு மிகவும் முக்கியமான நாள் ஆகும். மேலும் நடிகர் விஜய்சேதுபதி குறித்து நிறைய நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரை முதன்முதலில் சந்திக்கும் முன்னர் அவர் நடித்த அனைத்து படங்களையும் பார்க்க விரும்புகிறேன். அவர் நடித்த படங்களின் லிஸ்ட்டை தற்போது எடுத்துள்ளேன்’’ என்றார் ரித்திகா சிங்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்