ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு: இளைஞர்கள் ஒன்று திரண்ட போராட்டத்திற்கு சமந்தா ஆதரவு

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

TNN 20 Jan 2017, 2:31 pm
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர்.இவர்களின் போராட்டத்திற்கு தமிழ் சினிமா நட்சத்திரங்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். விஜய், கீர்த்தி சுரேஷ், ஜெயம் ரவி ஆகியோர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வீடியோ மூலம் தங்களது தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil actress samantha supports jallikattu
ஜல்லிக்கட்டு: இளைஞர்கள் ஒன்று திரண்ட போராட்டத்திற்கு சமந்தா ஆதரவு


நடிகர் சங்கத்தின் சார்பாக சென்னை டிநகரில் உள்ள நடிகர் சங்க மைதானத்தில் காலை 8 மணியளவில் தொடங்கிய மௌனப் போராட்டத்தில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி, சத்யராஜ், ரகுமான் மற்றும் சூர்யா, திரிஷா, கே.பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், சிவகார்த்திகேயன், பிரசன்னா உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் பங்கேற்றுள்ளனர்.
Best explained !! pic.twitter.com/FlMgxyGNcY — Samantha Ruth Prabhu (@Samanthaprabhu2) January 20, 2017
கீர்த்தி சுரேஷ், விஜய், ஆர்.ஜே.பாலாஜி, ராகவா லாரன்ஸ், மன்சூர் அலிகான் ஆகியோரைத் தொடர்ந்து சமந்தா தற்போது ஜல்லிக்குட்டுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். ஜல்லிக்கட்டு தொடர்பாக புகைப்படங்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்