ஆப்நகரம்

‘தேள்’ பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் சம்யுக்தா!

நடிகர் பிரபுதேவா தற்போது நடித்து வரும் ‘தேள்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 30 Oct 2018, 3:42 pm
நடிகர் பிரபு தேவா, தன்னுடைய உதவியாளரும், நடிகருமான ஹரிகுமார் இயக்கத்தில் ‘தேள்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். படத்திற்கு சி.சத்யா இசையமைக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் நாயகி மற்றும் இதர நடிகர்களின் தேர்வு நடைபெற்று வந்தது.
Samayam Tamil samyuktha


தற்போது நாயகியாக சம்யுக்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருடன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ஈஸ்வரி ராவும், காமெடி நடிகர் யோகி பாபுவும் நடிக்கவுள்ளனர்.

இதற்கு முன்னர் நடிகை சம்யுக்தா, ’மெர்குரி’ படத்தில் பிரபுதேவாவுடன் நடிக்க ஒப்பந்தமாகி, கால்ஷீட் பிரச்னையால் பின்னர் விலகிவிட்டார். அவருக்குப் பதில் அந்தப் படத்தில் ‘மேயாத மான்’ நடிகை இந்துஜா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகை சம்யுக்தா, தமிழ் சினிமாவில் ‘தேள்’ படத்தின் மூலம் பிரபு தேவாவுக்கு ஜோடியாக அறிமுகமாகவுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்