ஆப்நகரம்

ஆங்கில அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்துள்ள பிரபல அம்மா நடிகை!

பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணன், தற்போது ஒரு ஆங்கில அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

Samayam Tamil 14 May 2019, 3:31 pm
பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணன், தற்போது ஒரு ஆங்கில அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
Samayam Tamil Now-On-Stands


தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் ‘நாயகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அதையடுத்து தமிழில் பல படங்களில் நடித்தார். தமிழை அடுத்து இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் அஜித்உட்பட பலருக்கும் அம்மாவாக நடித்துள்ளார். நடிகர் விஜய்க்கு மட்டும் அம்மாவாக நடிக்கவில்லை என்ற வருத்தம் சரண்யா மனதில் உள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகை சரண்யா, அன்னையர் தினத்தை முன்னிட்டு ஒரு ஆங்கில பத்திரிகை அட்டைப் படத்திற்கு ஒரு போஸ் கொடுத்துள்ளார். அந்த அட்டைப் படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்