ஆப்நகரம்

Suriya: துணிவு படத்திற்காக களத்தில் இறங்கிய ஷாலினி ?தீயாய் பரவும் தகவல்..!

துணிவு படத்திற்காக ஷாலினி சோஷியல் மீடியாவில் இணைந்துள்ளதாக பேசப்பட்டு வருகின்றது

Authored byS வினோத்குமார் | Samayam Tamil 27 Nov 2022, 7:03 pm

ஹைலைட்ஸ்:

  • துணிவு திரைப்படம்
  • ரசிகர்கள் விமர்சனம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil அஜித்
அஜித் தற்போது வலிமை படத்திற்கு பிறகு துணிவு படத்தில் நடித்து வருகின்றார். வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள அஜித் இப்படத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்பவுள்ளார்.

நேர்கொண்டப்பார்வை திரைப்படம் வெற்றிபெற்ற நிலையில் இவர்கள் கூட்டணியில் அடுத்ததாக வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே துணிவு திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கும் முனைப்பில் அஜித் மற்றும் வினோத் இருக்கின்றனர்.


Rajini: பிரபல நடிகரை வீட்டிற்கு அழைத்து ரஜினி செய்த காரியம்..முறிந்துபோன பல வருட நட்பு..!

இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையில் வெளியாகவுள்ளது.


அதே தினத்தில் விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகின்றது. ஜில்லா மற்றும் வீரம் படங்களுக்கு பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் ஒரே தினத்தில் வெளியாகின்றது.


இந்நிலையில் அஜித்தின் மனைவி நடிகை ஷாலினி சோஷியல் மீடியாவில் இணைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதையடுத்து ரசிகர்கள் பலரும் ஷாலினி துணிவு படத்தின் ப்ரோமோஷனுக்காகத்தான் சோஷியல் மீடியாவில் இணைந்துள்ளதாக பேசி வருகின்றனர். ஆனால் அவர் சோஷியல் மீடியாவில் இணைந்தார் இல்லை அது வெறும் வதந்தியாக என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
S வினோத்குமார்
வினோத் குமார். நான் பொறியியல் மற்றும் ஊடகவியல் பட்டப்படிப்பை படித்துள்ளேன்.கடந்த நான்கு ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகினறேன். சினிமா மீது அதீத ஆர்வம் கொண்ட நான் தற்போது times internet சமயம் தமிழில் சினிமா தொடர்பான விஷயங்களை எழுதும் sub editor ஆக பணியாற்றி வருகின்றேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்