ஆப்நகரம்

ஆங்கில பத்திரிகை அட்டை படத்திற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை ஸ்ரேயா!

சென்னை: நடிகை ஸ்ரேயா, பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 31 Jan 2019, 7:25 pm
தமிழ் சினிமாவில் ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதையடுத்து ‘மழை’ படத்தில் நடித்தார். பின்னர் ரஜினி, விஜய், தனுஷ் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார் ஸ்ரேயா. இவர் தமிழை அடுத்து தெலுங்கிலும், இந்தியிலும் மற்றும் கன்னடத்திலும் நடித்துள்ளார்.
Samayam Tamil Sherya


ஒரு கட்டத்தில் தனது சினிமா மார்க்கெட் போகவே, விளையாட்டு வீரர் அன்ட்ரி கொச்சீவ்வை திருமணம் செய்துகொண்டார். தற்போது அவ்வப்போது ஒரு சில படங்கள் மட்டுமே நடித்து வருகிறார். தான் வெளியூர் சென்றால் அங்கு எடுக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட வண்ணம் இருப்பார்.

இப்போது அவர் ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்காக நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்