ஆப்நகரம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம்!

நடிகை ஸ்ரேயா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தனது குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்தார்.

Samayam Tamil 18 Dec 2018, 1:18 pm

ஹைலைட்ஸ்:

  • எனக்கு இருபது உனக்கு பதிணெட்டு படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகனவர் நடிகை ஸ்ரேயா
  • ரஷ்ய டென்னிஸ் வீரரும் தொழிலதிபருமான ஆண்ட்ரே கோஷ்சீவை கடந்த மார்ச் மாதம் கரம்பிடித்தார்
  • நேற்று தனது குடும்பத்தினருடன் திருமலை சென்ற நடிகை ஸ்ரேயா, ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம்!
நடிகை ஸ்ரேயா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தனது குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்தார்.
எனக்கு இருபது உனக்கு பதிணெட்டு திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகனவர் நடிகை ஸ்ரேயா. அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தார்.

இந்நிலையில் புது முகங்களின் வருகையால் மார்க்கெட் இழந்த நடிகை ஸ்ரேயா, ரஷ்ய டென்னிஸ் வீரரும் தொழிலதிபருமான ஆண்ட்ரே கோஷ்சீவை கடந்த மார்ச் மாதம் கரம்பிடித்தார். இந்நிலையில் நேற்று தனது குடும்பத்தினருடன் திருமலை சென்ற நடிகை ஸ்ரேயா, ஏழுமலையானை தரிசனம் செய்தார். தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு பிரசாதங்களை வழங்கினர்.

இதையடுத்த்து செய்தியாளர்களை சந்தித்த அவர், குடும்பத்துடன் ஏழுமலையான வழிபாடு செய்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறிக் கொள்வதாகத் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்