ஆப்நகரம்

நடிகை ஸ்ரேயாவுக்கு இந்து முறைப்படி மார்ச் 17ல் திருமணம்!

பிரபல நடிகை ஸ்ரேயாவுக்கு மார்ச் 17ம் தேதி இந்து மத முறைப்படி திருமணம் நடைபெறவுள்ள தகவ வெளியாகியுள்ளது.

Samayam Tamil 28 Feb 2018, 2:32 pm
பிரபல நடிகை ஸ்ரேயாவுக்கு மார்ச் 17ம் தேதி இந்து மத முறைப்படி திருமணம் நடைபெறவுள்ள தகவ வெளியாகியுள்ளது.
Samayam Tamil actress shriya sarans marriage will be held on march 17
நடிகை ஸ்ரேயாவுக்கு இந்து முறைப்படி மார்ச் 17ல் திருமணம்!


நடிகை ஸ்ரேயா சரண் தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து ‘மழை’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘சிவாஜி’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தார். சில வருடங்களுக்குப் பிறகு ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் சிம்பு ஜோடியாக ஸ்ரேயா நடித்தார், தற்போது ‘நரகாசூரன்’ படத்தில் அரவிந்த் சாமி ஜோடியாக நடித்து வருகிறார் ஸ்ரேயா..

இந்நிலையில், மார்ச் 17ஆம் தேதி ஸ்ரேயாவுக்குத் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரரும், தொழிலதிபருமான ஆண்ட்ரி கெசேவ்வைத் திருமணம் செய்ய இருக்கிறார் ஸ்ரேயா. இவர்களது திருமணம் உதய்ப்பூரில் நடக்க இருக்கிறது. மார்ச் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களுக்கு இந்து முறைப்படி இவர்கள் திருமணம் நடக்க இருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்