ஆப்நகரம்

Prasanna: மீண்டும் கர்ப்பமான சினேகா: சந்தோஷத்தில் பிரசன்னா!

நடிகை சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக பிரசன்னா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Aug 2019, 10:52 am
தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகைகளில் ஒருவர் சினேகா. 2000 ஆம் ஆண்டில் “என்னவளே”படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இவரது முதல் படம் விரும்புகிறேன். ஆனால் அதற்கு முன்னே என்னவளே படம் வெளிவந்தது.
Samayam Tamil Sneha Prasanna


நடிகை சினேகா கவர்ச்சி பாத்திரம் ஏற்காமலே இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர். 2000 ஆம் காலகட்டதில் இவரது போட்டோ அனைத்து நகர வீதிகளில் உள்ள கடைகளை அலங்கரித்தது. அந்தளவு இவர் பிரபலமாக விளங்கினார்.

தமிழ் சினிமாவில் ராசியான நடிகை எனும் புகழ்பெற்றவர் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்துள்ளார். “ஆனந்தம்”, “வசூல் ராஜா”, “புதுப்பேட்டை”, “கிங்”, “உன்னை நினைத்து” என பல வெற்றிப் படங்களில் தொடர்ந்து நடித்தார். சேரன் இயக்கத்தில் இவரது“ஆட்டோகிராஃப்”, கருபழனியப்பனின் “பிரிவோம் சந்திப்போம்” படம் இவரது நடிப்புத் திறமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

மேலும் படிக்க: Vishal Anisha Marriage: விஷால் திருமணம் நின்றதா? நிச்சயதார்த்த புகைப்படங்களை நீக்கியதால் பரபரப்பு!

இதையும் படிங்க: Dhanush: அசுரன் 2ஆவது லுக் போஸ்டர்: அதிர வைக்கும் வெற்றி மாறன் – தனுஷ் கூட்டணி!

Also Read This: Vikram: மருமகனை ஹீரோவாக்கிய சியான் விக்ரம்: ஜோடி யார் தெரியுமா?

தமிழ் மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு படங்களிலும் முன்னணி நாயகர்களுடன் நிறைய படங்களில் நடித்துள்ளார் சினேகா. 2009 ஆம் ஆண்டில் வெளியான “அச்சமுண்டு அச்சமுண்டு “ படத்தில் நடித்த போது நடிகர் பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார்.

2015 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு விஹான் எனும் மகன் பிறந்தார். இதற்கு பின் மீண்டும் சினேகா சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அதில், வேலைக்காரன் படம் சொல்லிக் கொள்ளும்படி அமைந்தது. தற்போது மீண்டும் சினேகா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் பிரசன்னா எங்கள் வீட்டுக்கு மீண்டும் ஒரு குட்டி வரப் போகிறது. சினேகா கர்ப்பமாக இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் கேள்விப்பட்டு பிரபலங்கள்பலரும் பிரசன்னா, சினேகா தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் அதேபோல் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

View this post on Instagram Chilling #swimming_time #sundayfunday A post shared by Sneha Prasanna (@realactress_sneha) on Aug 4, 2019 at 5:45am PDT

அடுத்த செய்தி

டிரெண்டிங்