ஆப்நகரம்

நடிகை சினேகாவிற்கு பிடித்தமான ஹீரோ?!

நடிகை சினேகாவிற்கு பிடித்தமான ஹீரோ?!

TOI Contributor 25 Sep 2016, 1:43 pm
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்திருந்த நடிகை சினேகா கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டார். தற்போது விளம்பரங்களிலும், தொலைக்காட்சி நிகழச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். இவரிடம் தமிழ் சினிமாவில் தற்போது உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டபோது, விஜய் சேதுபதி தான் இவருக்கு பிடித்த நடிகர் என்று கூறியுள்ளார். கதாப்பாத்திரம், வசன உச்சரிப்பு அனைத்துமே ஹீரோயிசம் போல் இல்லாமல் இயல்பாக உள்ளதாக புகழ்ந்துள்ளார். மேலும் இதனை சினிமா நிகழ்ச்சியில் அவரிடம் நேரில் கூறியதாகவும் சினேகா கூறியுள்ளார்.
Samayam Tamil actress snehas favourite actor
நடிகை சினேகாவிற்கு பிடித்தமான ஹீரோ?!


English Summary : Actress sneha’s favorite kollywood actor is vijay sethupathi.

அடுத்த செய்தி

டிரெண்டிங்