ஆப்நகரம்

பிரபல நடிகையின் கல்யாண மோதிரம் மட்டும் இத்தனை லட்சமா?!

பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் விரலில் அணிந்திருக்கும் அவருடைய கல்யாண மோதிரம் மட்டும் ரூ. 90 லட்சமாம்.

Samayam Tamil 17 May 2018, 1:27 pm
பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் விரலில் அணிந்திருக்கும் அவருடைய கல்யாண மோதிரம் மட்டும் ரூ. 90 லட்சமாம்.
Samayam Tamil sonam



சமீபத்தில் பாலிவுட் நடிகை சோனம் கபூரின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. அதுவும் பாலிவுட் நடிகை, நடிகர்களின் திருமணம் எப்படி நடக்கும் என்பதை நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அப்படியாக நடந்த திருமணம்தான் நடிகை சோனம் கபூரின் திருமணம். இவருடைய திருமணத்திற்கு ஒட்டுமொத்த பாலிவுட்டே இங்குதான் இருந்தது. திருமணம் முடிந்த கையோடு நடிகை சோனம் கபூர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள சென்றுவிட்டார்.


இந்த நேரத்தில் சோனம் கபூர் விரலில் அணிந்திருக்கும் கல்யாண மோதிரத்தின் விலை குறித்து ஒரு தகவல் பரவிவருகிறது. அதாவது அவர் கை விரலில் அணிந்திருக்கும் ஒரு மோதிரத்தின் விலை ரூ. 90 லட்சமாம். அதோடு சோனம் கபூர் கழுத்தில் கட்டியிருக்கும் தாலியில் தன்னுடைய நட்சத்திர குறியீடு மற்றும் கணவரது நட்சத்திர குறியீடு பொறித்து வைத்தும் டிசைன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்