ஆப்நகரம்

செல்வராகவன் எப்போதுமே அப்படிதான் : சோனியா அகர்வால்

செல்வராகவனைப்பற்றி மனம்திறந்து பேசிய சோனியா அகர்வால்

Samayam Tamil 23 Mar 2022, 7:12 am

ஹைலைட்ஸ்:

  • செல்வராகவன் கடின உழைப்பாளி
  • சோனியா அகர்வால் பேச்சு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil actress sonia agarwal about selvaraghavan
செல்வராகவன் எப்போதுமே அப்படிதான் : சோனியா அகர்வால்
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகளே தான் நடித்த முதல் படத்தில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பர். அதில் ஒருவர் தான் சோனியா அகர்வால். தான் நடித்த முதல் படமான காதல் கொண்டேன் படத்தின் மூலம் தன் சிறந்த நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தார்.

திவ்யா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகநாயகியான சோனியா அகர்வால் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார். அதைத்தொடர்ந்து 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என தொடர்ந்து தன் சிறந்த நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

என் அப்பா அனுபவித்த கஷ்டங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை: தனுஷ்


இப்படங்களில் நடிக்கும்போது சோனியா அகர்வாலுக்கும் இயக்குனர் செல்வராகவனுக்கும் காதல் மலர்ந்தது. அதைத்தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இருப்பினும் திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.


இந்நிலையில் தற்போது சோனியா அகர்வால் இயக்குனர் செல்வராகவனை பற்றி பேசியுள்ளார். செல்வராகவன் என்பவர் கடினமாக உழைக்கக்கூடியவர். எப்போதும் வேலைகளின் மீதே கவனம் செலுத்துவார். அதுவே எனக்கு அவரிடம் மிகவும் பிடித்த விஷயமாகும்.


பின்பு இருவரும் பழகியதற்கு பிறகு இருவருக்குள்ளும் காதல் வந்தது. எனவே இருவரும் திருமணம் செய்துகொண்டோம். திருமணம் ஆகும்போது எனக்கு அளவுகடந்த சந்தோஷம். இருப்பினும் அந்த சந்தோஷம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கவில்லை.


சில காரணங்களால் நாங்கள் பிரிய நேர்ந்தது. திருமணம் ஆகும்போது எந்தளவு சந்தோஷம் இருந்ததோ பிரியும்போது அதிக மனவேதனையுடன் தான் பிரிந்தோம் என கூறினார் சோனியா அகர்வால் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்