ஆப்நகரம்

அவர் ஜென்டில்மேன், 'மீ டு' விவகாரத்தில் நடிகை சோனி அர்ஜுனுக்கு ஆதரவு!

சென்னை: அர்ஜுன் நிஜமாகவே ஜென்டில்மேன். அவர் மீது தவறான கருத்து கூறுவது வருந்தத்தக்கது என நடிகை சோனி செரிஸ்டா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Oct 2018, 11:58 pm
'நிபுணன்' பட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜுன் மீது பாலியல் குற்றச்சாட்டினார்.
Samayam Tamil 1


இது தொடர்பாக தன் ஃபேஸ்புக் அவர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''அர்ஜுன் நாயகனாக நடித்த படத்தில் நானும் நடித்தேன். அவருடன் நடிக்க மிகவும் மகிழ்ச்சியாக காத்திருந்தேன். ஆனால் அதன் பின் மகிழ்ச்சியை உணரவில்லை.

ஒரு காதல் காட்சியில் என் அனுமதியில்லாமல் திடீரென கட்டிப்பிடித்தார். என்னிடம் சொல்லாமல், என் அனுமதி பெறாமல் திடீரென என்னை கட்டி அணைத்தார். இது எனக்குள் காயத்தை ஏற்படுத்தியது.

சினிமாவாக இருந்தாலும் நடிகையின் அனுமதி இல்லாமல் நெருக்கமான காட்சிகளில் அப்படிச் செய்தது தவறு. படப்பிடிப்பு முடியும் வரை அர்ஜுனிடம் இருந்து நான் விலகி நின்றேன்.'' என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அர்ஜுனுக்கு ஆதரவாக நடிகை சோனி செரிஸ்டா கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அர்ஜுன் தென்னிந்தியாவின் முக்கியமான நடிகர். நிஜமாகவே ஜென்டில்மேன். தூய்மையானவர். மக்கள் மத்தியில் நிரந்தரமாக இடம் பிடித்திருக்கிறார். நான் நடிக்கும் 'இருவர் ஒப்பந்தம்' படத்தில் நாகரிகமாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார்.

எந்த அமைப்பாக இருந்தாலும் அதைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பது என் கருத்து. அவர் மீது தவறான கருத்தை கூறுவது வருந்தத்தக்கது'' என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்