ஆப்நகரம்

Pawan Kalyan: ஸ்ரீ ரெட்டியிடம் சிக்கி தவிப்பு; தீவிர அரசியலில் இறங்கிய பிரபல நடிகருக்கு வந்த சோதனை!

எப்போதும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நடிகை ஸ்ரீ ரெட்டி, புதிதாக ஒரு விஷயத்தை கையில் எடுத்துள்ளார்.

Samayam Tamil 27 May 2019, 11:47 am
தெலுங்கு நடிகையாக அறிமுகமாகி, பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி, தற்போது நடிகை ஸ்ரீ ரெட்டி தமிழகத்தில் தஞ்சமடைந்து உள்ளார். இவரிடம் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள், இயக்குநர், தமிழ் திரையுலகின் பிரபலங்கள் வரை பலரும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளனர்.
Samayam Tamil Sri Reddy


அந்த வகையில் தற்போது தீவிர அரசியலில் இருக்கும் பிரபல நடிகர் சிக்கியுள்ளார். அவர் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும், ஜன சேனா என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் பவன் கல்யாண்.

இவரைப் பற்றி ஸ்ரீ ரெட்டி கூறுகையில், பவன் கல்யாணிற்கு நிர்வாகத் திறமை இல்லை. 10ஆம் வகுப்பு கூட தேறாதவர். போலியான சான்றுகள் உடன் இருக்கிறார். அரசியலுக்கு சுத்தமாக தகுதியானவர் இல்லை என்று கூறியுள்ளார்.

ஆந்திர மக்களிடம் நற்பெயர் கொண்டவர் பவன் கல்யாண். அரசியலிலும் மெல்ல வளர்ந்து வருகிறார். சமீபத்திய தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. இந்த சூழலில் பவன் கல்யாண் மீது ஸ்ரீ ரெட்டி கூறிய விமர்சனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்