ஆப்நகரம்

கொலை செய்யப்பட்டாரா ஸ்ரீதேவி? கேரள டிஜிபி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்தல்ல என்றும், அது கொலையாக இருக்கலாம் எனும் அதிர்ச்சி தகவலை கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங்க் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 9 Jul 2019, 3:37 pm
கேரள ஜெயில் டிஜிபி ரிஷி ராஜ் சிங்க், தன் மறைந்த நண்பரும், பிரபல ஃபாரன்ஸிக் நிபுணருமான டாக்டர் உமாதாதன் உடனான நினைவுகளை பகிர்ந்த போது, அவர் தன்னிடம் இந்த தகவலை பகிர்ந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Sridevi


நான் என் நண்பனிடம் இதுபற்றி கேட்டபோது, அவன் ஸ்ரீதேவியின் மரணம் தற்செயலாக இருப்பதற்கு வாய்ப்பற்ற பல காரணங்களை சுட்டிக்காட்டி, இது விபத்தாக இருப்பதற்கு வாய்ப்பில்லை எனக் தெரிவித்தாகக் கூறினார்.

டாகடர் உமாதாதன் கேரளா க்ரைம் வழக்குகள் பலவற்றில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க, தன் அறிவாலும், தொழில் திறமையாலும் உதவியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் பிப்ரவரி 24ஆம் தேதி துபாயில் கணவருடன் ஸ்ரீதேவி திருமணத்தில் கலந்து கொண்டார்.

அப்போது குளியல் அறையில் இருந்த பாத் டப்பில் குடி போதையில், மயக்க நிலையில் மூழ்கி இறந்ததாக கூறப்பட்டது. இந்த வழக்கில் டாக்டர் உமதாதன் கருத்துக்களாக டிஜிபி ரிஷி ராஜ் சிங்க் சிலவற்றை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதாவது, ஸ்ரீதேவி எவ்வளவு குடித்திருந்தாலும் அவர் குளியலறையில் உள்ள பாத் டப்பில் மூழ்கி இறக்க வாய்ப்பில்லை. அந்த டப் ஒரு அடி ஆழமே கொண்டது. யாராவது அவரை தள்ளி மூழ்கடித்திருக்க வேண்டும். ஒரு மனிதனால் ஒரு அடி நீரில் மூழ்கி சாக முடியாது எனக் கூறியதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவி இறந்த சமயத்தில் இந்த விசயங்கள் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தகுந்த ஆதாரங்கள் இல்லாததால், இது விபத்து என்பதாக முடிக்கப்பட்டது. இப்போது இந்த வழக்கில் கேரள உயரதிகாரியான டிஜிபி ரிஷிராஜ் சிங்க் கூறியுள்ள கருத்துக்கள் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கடந்த வாரம் 73 வயதில் இறந்த டாக்டர் உமாதாதன் கேரளாவின் மிக முக்கிய நபராக விளங்கியவர். பல சிக்கலான வழக்குகளில் கேரள அரசுக்கு குற்றவாளிகளை பிடிக்க உதவியவர். அவர் இவ்வாறு கூறியுள்ளார் எனில் ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம் இருக்கிறது என அனைவரும் கூறி வருகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்