ஆப்நகரம்

விஷாலுடன் குத்தாட்டம் போடவுள்ள பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை!

சென்னை: பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், நடிகர் விஷாலுடன் இணைந்து ஒரு படத்தில் குத்தாட்டம் ஆடவுள்ளார்.

Samayam Tamil 15 Nov 2018, 6:18 pm
பாலிவுட் சினிமாவில் முன்னணியில் இருப்பவர் கவர்ச்சி நடிகை சன்னி லியோன். இவருக்கு இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
Samayam Tamil Vishal


தற்போது சன்னி லியோன் ‘வீரமாதேவி’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் நான்கு மொழிகளில் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி.

இந்நிலையில் சன்னி லியோன், நடிகர் விஷால் தமிழில் நடித்து வரும் ‘அயோக்கியா’ படத்தில் அவருடன் இணைந்து குத்தாட்டப் பாடலுக்கு நடனமாடவுள்ளார்.

இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் வெங்கட்மோகன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை ராஷி கண்ணா நடிக்கிறார்

Actress Sunny Leone dance with Kollywood hero Vishal.

அடுத்த செய்தி

டிரெண்டிங்