ஆப்நகரம்

அஜித்துடன் இணையும் ஷ்ரத்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த டாப்சி!

‘தல’ அஜித்துடன் இணைந்து நடிக்கவுள்ள நடிகை ஷ்ரத்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகை டாப்சி.

Samayam Tamil 30 Jan 2019, 1:32 pm
‘விஸ்வாசம்’ படத்தை அடுத்து நடிகர் அஜித், அடுத்ததாக எச். வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
Samayam Tamil Taapsee-shraddha


இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறார். இந்தப் படம் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும். இந்தியில் அமிதாப் பச்சன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார். டாப்சி நடித்த வேடத்தில் ஷ்ரத்தா கதாநாயகியாக நடிக்கிறார். தான் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு, டாப்சி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகை டாப்சி, டுவிட்டரில் “குட் லக். எனக்கு முக்கியமான படமாக இது அமைந்தது போல் உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் என நம்புகிறேன்” என்று தனது பதிவிட்டுள்ளார் டாப்சி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்