ஆப்நகரம்

‘பிதாமகன்’ விக்ரம் கேரக்டரில் நடிக்கும் நடிகை!

‘பிதாமகன்’ படத்தில் விக்ரம் நடித்துள்ள மயான ஊழியர் போல் நடிகை ஒருவர் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

TNN 25 Sep 2017, 9:16 pm
‘பிதாமகன்’ படத்தில் விக்ரம் நடித்துள்ள மயான ஊழியர் போல் நடிகை ஒருவர் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
Samayam Tamil actress takes the role of pithamagan vikram
‘பிதாமகன்’ விக்ரம் கேரக்டரில் நடிக்கும் நடிகை!


‘பிதாமகன்’ படத்தில் நடிகர் விக்ரம் சுடுகாட்டில் பணியாற்றி வருவார். அதேபோல் சிவாஜி கணேசன் நடித்த ‘அரிச்சந்திரா’ படத்தில் சிவாஜியும் அதே தொழில் செய்து வருவார். அதேபோல் தற்போது நடிகை ஒருவர் மயான ஊழியராக நடித்து வருகிறார். படத்தின் பெயர் ‘ஆறடி’.

‘ஆறடி’ படம் பற்றி இயக்குனர் ஜே.சந்தோஷ்குமார் கூறுகையில்,’இன்றைய காலகட்டத்தில் பெண்கள் எல்லா துறையிலும் நுழைந்து சாதனை படைத்து வருகிறார்கள். அவர்கள் இதுவரை செய்யாத வேலை மயான ஊழியர் வேலைதான். அந்த துறையில் ஒரு பெண் ஈடுபடுகிறார் என்றால் அவரது குடும்ப சூழல் மற்றும் சமூக பாகுபாடு போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அது எதனால் நடந்தது என்பதை அலசுகிறது இப்படம்.

படத்தில் விஜய்ராஜ், தீபிகா, டாம்பிரான்கோ, ஜீவிதா நடிக்கின்றனர். படத்தை நவீன்குமார். சுமதி, மோகனவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்திற்கு அபிஜோஜோ இசையமைத்து வருகிறார்‘‘ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்