ஆப்நகரம்

முதல் படத்திலேயே தனக்கு தானே டப்பிங் பேசிய நடிகை!

தான் நடித்த முதல் படத்திலேயே தனக்கு தானே டப்பிங் பேசினார் மறைந்த ரவிச்சந்திரனின் பேத்தி தன்யா.

TOI Contributor 20 Dec 2016, 1:43 pm
தான் நடித்த முதல் படத்திலேயே தனக்கு தானே டப்பிங் பேசினார் மறைந்த ரவிச்சந்திரனின் பேத்தி தன்யா.
Samayam Tamil actress tanya gave dubbing voice in her first film
முதல் படத்திலேயே தனக்கு தானே டப்பிங் பேசிய நடிகை!


மறைந்த நடிகர் ரவிச்சந்திரன், இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் ‘காதலிக்க நேரமில்லை’ படம் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு ‘இதயக்கமலம்’, ’குமரிப்பெண்’, ’மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’, ‘அதே கண்கள்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். ‘ஊமை விழிகள்’ படத்தில் வில்லனாக அறிமுகமானார். அதன்பின் பல படங்களில் பல கேரக்டரில் நடித்துள்ளார். பின்னர், அவரது மகன் ஹம்சவர்தனும் பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். தந்தையைப் போல் அவரால் சினிமாவில் நீடிக்கமுடியவில்லை.

தற்போது ரவிச்சந்திரனின் பேத்தி தன்யா, ‘பலே வெள் ளையத்தேவா’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். தன்யா நன்றாக தமிழ் பேசக்கூடியவர். அதோடு, தான் நடித்த முதல் படத்திலேயே தனக்குத்தானே டப்பிங்கும் பேசியுள்ளார் தன்யா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்