ஆப்நகரம்

வர்மாவின் கன்னத்தை கிள்ளிய ஜானு!

பிரபல நடிகை த்ரிஷா, இளம் நடிகர் துருவ்வின் கன்னத்தை கிள்ளி விட்டுச் சென்றாக துருவ் கூறியுள்ளார்.

Samayam Tamil 4 Jan 2019, 3:18 pm
தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்தப் படம் தற்போது தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக்காகிறது. தமிழ் ரீமேக் படத்தை இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் நாயகனாக விக்ரமின் மகன் துருவ் நடித்துள்ளார்.
Samayam Tamil trisha


படத்தின் நாயகியாக மேகா என்ற மாடல் அழகி நடித்துள்ளார். இந்தப் படத்தைப் பாலாவின் பி ஸ்டுடியோஸ் மற்றும் இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படம் அடுத்த மாதம் காதலர் தினத்தன்று வெளியாகிறது.

இந்நிலையில் துருவ் விக்ரம் தனக்கு பிடித்த நடிகையை பற்றி கூறுகையில், ‘‘சிறுவயதில் இருந்தே எனக்கு த்ரிஷாவை ரொம்ப பிடிக்கும். ஆனால், இதுவரை அவரை சந்தித்தது கூட இல்லை. ஒருமுறை ப்ரிவியூ தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது நான் அயர்ந்து தூங்கிவிட்டேன். அப்போது அவர் என் பக்கத்தில் வந்து என் கன்னத்தை கிள்ளிவிட்டு சென்றார்’’ என தனது நினைவுகளை பகிர்ந்துக்கொண்டார் துருவ்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்