ஆப்நகரம்

Leo, Trisha: 'லியோ' படத்திலிருந்து விலகியதாக பரவிய வதந்தி: திரிஷா செய்த காரியம்.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 9 Feb 2023, 8:29 am
அண்மையில் விஜய், லோகேஷ் கனகராஜ் இணைந்த 'தளபதி 67' படத்தின் டைட்டில் 'லியோ' வெளியாகி இணையத்தை கலக்கியது. இதற்காக வெளியிடப்பட்ட புரோமோ வீடியோவும் இணையத்தில் டிரெண்டிங்கில் இடம் பிடித்தது. இந்நிலையில் தற்போது 'லியோ' படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
Samayam Tamil Leo
Leo


மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய், லோகேஷ் கனகராஜ் மீண்டும் கூட்டணி இணைந்துள்ளனர். கோலிவுட் சினிமா அதிகம் எதிர்பார்க்கும் படமாக 'தளபதி 67' உருவாகி வருகிறது. இந்தப்படம் லோகேஷ் கனகராஜின் LCU எனப்படும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சல் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

'லியோ' படத்தில் சஞ்சய் தத், மிஷ்கின், திரிஷா, கெளதம் மேனன், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், அர்ஜுன், மன்சூர் அலிகான், மற்றும் சாண்டி உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

AK 62: 'ஏகே 62' படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம்: வெளியான செம்ம மாஸ் தகவல்.!

இந்நிலையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் நடிக்கிறார் த்ரிஷா. பட பூஜையின்போது விஜய்யும், த்ரிஷாவும் சிரித்த முகமாக இருந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி, ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்தது. இதனையடுத்து காஷ்மீரில் நடக்கும் படப்பிடிப்பில் இருந்து திரிஷா திடீரென கிளம்பி சென்னை வந்துவிட்டதாக இணையத்தில் செய்திகள் வெளியானது.

Disha Patani: ‘சூர்யா 42’ பட நாயகி செய்த காரியம்: தரமான சம்பவமா இருக்கே...!

இதனால் திரிஷா 'லியோ' படத்திலிருந்து விலகிவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. காஷ்மீரில் நிலவும் கடும் குளிர் காரணமாகவே அவர் சென்னை திரும்பியதாக கூறப்பட்டது. இந்நிலையில் 'லியோ' படப்பிடிப்பில் திரிஷா மீண்டும் கலந்து இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்