ஆப்நகரம்

வெப் சீரிஸில் நடிக்கும் வரலட்சுமி!

நடிகை வரலட்சுமி, சினிமாவை அடுத்து தற்போது தெலுங்கில் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 11 Dec 2018, 4:54 pm
‘போடா போடி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. தற்போது கிடைக்கும் வில்லி கேரக்டரில் கூட நடித்து வருகிறார். கதாநாயகியாக நடித்து விட்டு வில்லியாக நடித்தால் பின்னர் நாயகி வாய்ப்பு பறிபோய்விடும் என்று பலர் கூறியதை அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
Samayam Tamil varu


தற்போது வில்லியாக கலக்கி வரும் நேரத்தில் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். ஜெயா டிவியில் உன்னை அறிந்தால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் வரலட்சுமி. டிவியில் சீரியல் பார்க்கும் காலம் மெல்ல மெல்ல மறையத் தொடங்குகிறது. மக்களின் கவனம் அதிலும் குறிப்பாக இளசுகளின் கவனம் வெப்சீரிஸ் பக்கம் திரும்பியுள்ளது.

இதை புரிந்து கொண்ட வரலட்சுமி தெலுங்கில் உருவாகும் வெப்சீரிஸில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தான் முதல் முதலாக வெப்சீரிஸில் நடிப்பது குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார் வரலட்சுமி. அந்த சீரிஸை புஷ்பா இயக்குகிறார்

அடுத்த செய்தி

டிரெண்டிங்