ஆப்நகரம்

வரலட்சுமி நடித்த மலையாள படம் ‘காட்டு’ அக்டோபர் 5ல் ரிலீஸ்!

நடிகை வரலட்சுமி மலையாளத்தில் நடித்துள்ள ‘காட்டு’ என்ற படம் அக்டோபர் 5ம் தேதி வெளியாகவுள்ளது.

TNN 27 Sep 2017, 3:27 pm
நடிகை வரலட்சுமி மலையாளத்தில் நடித்துள்ள ‘காட்டு’ என்ற படம் அக்டோபர் 5ம் தேதி வெளியாகவுள்ளது.
Samayam Tamil actress varalakshmis malayalam movie will release on october 5th
வரலட்சுமி நடித்த மலையாள படம் ‘காட்டு’ அக்டோபர் 5ல் ரிலீஸ்!


நடிகை வரலட்சுமி இந்தாண்டு அதிக படங்களில் நடித்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களில் வரலட்சுமி நடித்த ‘விக்ரம் வேதா’, ‘நிபுணன்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. மற்றும் சிபிராஜூடன் நடித்துள்ள ‘சத்யா’ படமும் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்தநிலையில் மலையாளத்தில் வரலட்சுமி நடித்துள்ள ‘காட்டு’ படம் வரும் அக்டோர் 5ம் தேதி ரிலீசாக இருக்கிறது. கடந்த வருடம் நடிகர் மம்முட்டியுடன் இணைந்து ‘கசபா’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் மலையாள திரையுலகிலும் கால் பதித்தார் நடிகை வரலட்சுமி.. அதையடுத்து தற்போது மம்முட்டியுடன் மீண்டும் ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் வரலட்சுமி.

அதற்கும் முன்பே ‘காட்டு’ என்கிற படத்திலும் நடித்துள்ளார். இந்தப்படத்தை அருண்குமார் அரவிந்த் இயக்கியுள்ளார். படத்தில் முரளிகோபி மற்றும் ஆசிப் அலி ஆகியோர் ஹீரோவாக நடித்துள்ளனர். இந்தப்படத்தில் நடிகை வரலட்சுமி முத்துலட்சுமி என்ற பெயரில் தைரியமான தமிழ்ப்பெண் கேரக்டரில் நடித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்