ஆப்நகரம்

பயமில்லாமல் இப்படியொரு காரியம் செய்த வேதிகா!

‘மதராசி’ பட நடிகை வேதிகா பயமில்லாமல் தன் கழுத்தில் மலைப்பாம்பை சுற்றிக் கொண்டு இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 3 May 2018, 5:29 pm
‘மதராசி’ பட நடிகை வேதிகா பயமில்லாமல் தன் கழுத்தில் மலைப்பாம்பை சுற்றிக் கொண்டு இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை வேதிதா தமிழில் ‘மதராசி’ படம மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படம் 2005ல் வெளியானது. அதையடுத்து வேதிதா, ‘முனி’, ‘காளை’, ‘சக்கரக்கட்டி’, ‘காவியத் தலைவன்’, ‘பரதேசி’ உட்பட பல படங்களில் நடித்தார்.

தற்பொழுது வேதிதா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் கைவசம் ‘காஞ்சனா 3’, ‘ஹோம் மினிஸ்டர்’, ‘கொழிதன் கச்சன்’ என 3 படங்கள் உள்ளன.



இந்நிலையில் நடிகை வேதிகா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார். அதில் அவர் ஒரு பாம்பை பயமில்லாமல் கையில் வைத்துக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அவரது தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்