ஆப்நகரம்

மகளின் கள்ளக்காதலனை கொல்ல கூலிப்படையை ஏவிய தந்தை கைது!

‘மாயாவி’ பட நடிகையுடன் கள்ளக்காதல் வைத்திருந்த டிரைவரை, நடிகையின் தந்தை கூலிப்படையை ஏவி விட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

Samayam Tamil 30 Aug 2018, 4:31 pm
‘மாயாவி’ பட நடிகையுடன் கள்ளக்காதல் வைத்திருந்த டிரைவரை, நடிகையின் தந்தை கூலிப்படையை ஏவி விட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
Samayam Tamil vishnupriya


சூர்யா, ஜோதிகா, சத்யன் நடிப்பில் வெளியான படம் ‘மாயாவி’. இந்தப் படத்தில் ஜோதிகா ஒரு நடிகையாக நடித்திருப்பார். சூர்யாவும், சத்யனும் திருடனாக நடித்திருந்தனர். இந்தப் படத்தில் ஊனமுற்ற பெண்ணாக நடித்தவர் விஷ்ணுபிரியா. இந்தப் படத்தை காமெடி நடிகர் சிங்கம்புலி இயக்கியிருந்தார்.

இதில் ஊனமுற்ற பெண்ணாக விஷ்ணு பிரியா, “கடவுள் தந்த அழகிய வாழ்வு” என்ற பாடலின் மூலம் மக்களிடையே பிரபலம் ஆனார். இவர் சென்னையைச் சேர்ந்தவர் இவரது கணவர் ரமேஷ் கிருஷ்ணா.இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கணவர் ரமேஷிற்கு உடல் நலம் சரியில்லாததால் கொடைக்கானலில் சில மாதங்கள் தங்க வேண்டியிருந்தது. இதனால் நடிகை மற்றும் கணவர், அப்பாவுடன் அங்கு தங்கியிருந்தனர். இந்நிலையில் விஷ்ணு பிரியாவுக்கு பிரபாகரன் என்ற டிரைவர் அறிமுகமானார். பின்னர் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. இதை விஷ்ணு பிரியாவின் தந்தை சூரிய நாராயணன் கண்டித்தார்..

ஆனால், நடிகை பிரியா அதை கேட்பதாக தெரியவில்லை. தொடர்ந்து டிரைவரிடம் தொடர்பு வைத்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சூரியநாராயணன் கொடைக்கானலில் கூலிப்படையை ஏற்பாடு செய்து பிரபாகரனை கொன்று அவரது உடலை ஒரு பள்ளத்தில் தூக்கி போட்டுள்ளனர். தற்போது இந்த விஷயம் போலீசிக்கு தெரிய வர விஷ்ணு பிரியாவின் தந்தை சூரிய நாராயணனை கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்