ஆப்நகரம்

ஒரு நாளுக்கு ஒரு கோடி தர இருந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகர் அஜித்!

விளம்பரத்தில் நடிக்க ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் தருகிறோம் என்று கூறிய விளம்பர நிறுவனத்திடம் நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார் நடிகர் அஜித்.

Samayam Tamil 19 Jan 2019, 2:50 pm
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்‘ படம் உலகம் முழுவதும் வெற்றி நடைபோட்டு வசூலை குவித்து வருகிறது. தற்போது வரை இந்த படம் ரூ.125 கோடி வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ‘விஸ்வாசம்‘ படத்தில் வேட்டி சட்டையில் கலக்கும் அஜித்தை, பிரபல வேட்டி நிறுவனம் ஒன்று அஜித்தை அணுகி தங்களது பிராண்ட் விளம்பர படத்தில் நடிக்குமாறும், ஒரே ஒரு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் தர தயார் என்றும் கூறினார்களாம்.
Samayam Tamil ajith


ஆனால் ஆரம்பகாலத்தில் ஒருசில விளம்பர படத்தில் நடித்த அஜித், இனிமேல் விளம்பர படத்தில் நடிக்க போவதில்லை என்பதை கொள்கையாக வைத்திருப்பதாக கூறி மறுத்துவிட்டாராம். விளம்பர படத்தில் நடிக்க ஒரு நாளுக்கு ஒரு கோடி கொடுக்க தயாராக இருந்தும் அதை விரும்பாமல் மறுத்து விட்டார் அஜித். அதனால்தான் ரசிகர்கள் நடிகர் அஜித்தை ‘தல’ என்று கொண்டாடி வருகின்றார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்